• Dec 26 2024

‘ஆக்சன்’ என்றதும் என் குழந்தை வயிற்றில் எட்டி மிதிக்கும்! மதுமிதா சொன்ன சுவாரஸ்ய தகவல்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகிய படம் தான் 'நினைவெல்லாம் நீயடா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 

இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன், கதாநாயகியாக மனீஷா யாதவ் மற்றும் யுவலட்சுமி, சினாமிகா, ரோகித், மனோபாலா, மதுமிதா, இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் கே.ராஜன், ஆர்.வி. உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், கோமல் ஷர்மா, மதுமிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 


இந்நிலையில், 'நினை வெல்லாம் நீயடா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை மதுமிதா பேசியதாவது,

'நினைவெல்லாம் நீயடா' படம் வாழ்நாள் நாள் முழுவதும் என் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. 


என்னுடைய பிரசவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை கூட இந்த படப்பிடிப்பில் நடித்து வந்தேன். இயக்குநர்  ஆக்சன் என்று மைக்கில் சொல்லும்போது அந்த அதிர்வை கேட்டு என் வயிற்றில் உள்ள குழந்தை என்னை எட்டி உதைப்பான். அதை மறக்கவே முடியாது.

ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு படம் உருவாகி வெளியாகும் வரை ஒரு பேறுகாலம் போலத்தான். பெண்களுக்கு உள்ள அத்தனை அவஸ்தைகளும் இயக்குநர்களுக்கும் உண்டு. அந்த வகையில் நல்ல வெற்றியைத் தரக்கூடிய ஒரு குழந்தையாக இப்படம் இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

Advertisement

Advertisement