• Dec 25 2024

யார் இந்த அசல் கோலார்...இவரின் உண்மை பெயர் இது தானா..பலரும் அறிந்திடாத மறுபக்கம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக திகழ்பவர் தான் அசல் கோலார்.இவர் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் செய்யும் செயலால் ரசிகர் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றார்.இந்நிலையில் இந்த அசல் கோலார் யார் என்பதை பார்ப்போம் வாங்க...

இவரின் முழுப்பெயர் வசந்தகுமார் பக்தவாச்சலம்.இவர் 1996 இல் பிறந்து உள்ளார்.ஆனால் இணையத்தளத்தில் 1966 என்று மாறிப் போட்டுள்ளார்கள்.இவருக்கு கேர்ள் ப்ரண்ட் இல்லை என்று எல்லாம் சொல்லி இருக்கிறார்.அதற்கு காரணம் இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆம்.இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை காசிமேடாம்.ஆனால் இவரது சொந்த ஊர் கடலுாராம்.இவங்க அம்மா அப்பா எல்லாம் அந்த ஊர் தானாம்.


இவருக்கு சின்ன வயசில் இருந்தே இசையில் அதிகம் ஆர்வம் உள்ளதாம்.இவருக்கு எமிண்டம் என்ற சிங்கரை அதிகம் பிடிக்குமாம்.இவர் தனது பெயரையே மாத்தி உள்ளாராம்.அதை கமலிடமே கூறி இருந்தார். யூ டியூப் செயலியில் இவரது ராப் பாடல்கள் பதிவேற்றம் செய்து திரைத்துறையில் பலரின் கவனத்திற்கு சென்று தற்போது திரைப்பட பாடல்கள் பாடி வருகிறார்.


அத்தோடு இவர் ஒரு சிங்கர்,ராபர்,மியுசிசன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.இவர் அட்டிக்கல்ஜர் என்றதில் இருந்து தான் வந்துள்ளார்.இவர் சந்தோஷ் நாரயணன் கூட எல்லாம் நிகழ்ச்சி பண்ணி இருக்கிறார்.அவரே இவரை புகழ்ந்து எல்லாம் கூறியுள்ளார்.இவர் வருங்காலத்தோட மியுசிஜன் என்று எல்லாம் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.இவரை மீடியாவிற்கு கொண்டு வந்த நபர் ஆவ்ரோ என்ற நபர்.இவர் ஆஸ்ரேலியாவிற்கு போய் மியுசிக் எல்லாம் கத்திட்டு வந்து சில பாடல்கள் பாடிட்டு வந்திட்டு இருக்கிறார்.


அசல்  எழுதியும் பாடியும் உள்ளார்.அதாவது ஜொர்த்தால எனும் பாடல் தான் அது.அதாவது இவர் எந்த நேரமும் பாடல் எழுதிட்டே இருப்பாராம்.இதைப் பார்த்த இவங்க அம்மா கேட்பாங்களாம் என்ன நீ எப்ப பார்த்தாலும் கிறிக்கிக்கிட்டே இருக்காய் என கேட்பாராம்.இல்லை எனக்கு சிங்கராக வரனும் என சொன்னால் உருப்படியா ஒரு வேலையை பார் என அம்மாவும் அப்பாவும் திட்டுவார்களாம்.

ஆனால் அவங்க அம்மா புரிஞ்சிட்டுகிட்டு அவரின் ஆசைக்கு உறுதுணையாக இருந்தாவாம்.இவருக்கு ஒரு தங்கையும் உள்ளார்.இவரின் அப்பா எப்ப பார்த்தாலும் திட்டிட்டே இருப்பார்.இவர் தான் புலி மாங்காய்..எனும் பாடலை பாடியுள்ளார்.ஒரு சில பாடல்கள் பாடியதும் தான் இவரை யார் என்றே தெரியவந்துள்ளது.தமிழ் பாடகரான இவர் பல தெலுங்கு படங்களிலும் பாடியுள்ளார். போனா போவுரா, லைஃப் ஆஃப் இளங்கலை, காவா போன்றவை இவர் பாடிய பாடல்களில் சில. அசல் கோலாரின் முதல் காபி வித் காதல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் 3 பாடல்களை எழுதியுள்ளார்.அத்தோடு இவர் இதுவரை 50 பாடல்கள் வரை எழுதி உள்ளாராம்.அதில் சின்ன சின்ன பாடல்களும் அடங்குமாம்.


இவ்வாறு இருக்கையில் தான் இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.ஆனால் இவர் வீட்டுக்குள் செய்த முகம் சுழிக்கும் செயலால் குறைந்த வாக்குகளை பெற்று மூன்றாவது ஆளாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 


Advertisement

Advertisement