• Dec 25 2024

கமலுக்கு "உலகநாயகன்" பட்டம் வழங்கியது யார் தெரியுமா! அவரே கூறிய அறிய தகவல்....

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் கமலஹாசன் பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது தக் லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நேற்று தன்னை ரசிகர்கள் அன்போடு உலகநாயகன் என்று அழைத்து வந்தனர். அதற்கு நன்றி ஆனால் இனி கமலஹாசன் என்று அழையுங்கள் நான் இனி உலகநாயகன் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக தனது டுவிட் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் அதிருப்திக்கு உள்ளாகினர். 


இதனை குறிப்பிட்டு இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் முன்னர் பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.  `உலகநாயகன்' என்ற பட்டத்தை `தெனாலி' திரைப்படத்தில் கமலஹாசனுக்கு கொடுத்தார். நடிகர் கமல்ஹாசனை அவருடைய ரசிகர்கள் `உலகநாயகன்' என அன்போடு அழைத்து வந்தனர்.

d_i_a


அவருக்கு முதன் முதல்ல `உலகநாயகன்'னு நான்தான் `தெனாலி' திரைப்படத்துல டைட்டில் போட்டேன். அப்போ அன்னைக்கு அதை அவரை டார்சர் பண்ணி எடுத்தேன். அந்த நேரத்துல அவர் ஆளவந்தான் படத்தினுடைய ஷூட்டிங்ல பிஸியாக இருந்தார். அவர் டைட்டிலெல்லாம் வேண்டாம்னுதான் முதல்ல சொன்னார். என்னுடைய ஆத்ம திருப்திக்கு எடுத்துக்குறேன்னு சொல்லிதான் அதை எடுத்துட்டு வந்தேன். 


அந்த டைட்டில் வீடியோ முதல்ல அவருடைய ஆழ்வார்பேட்டை அலுவலகத்திலிருந்து தொடங்கும். அப்படியே சென்னை, தமிழ்நாடு, இந்தியா, உலகம்னு அப்படியே கருவிழி மாதிரி காணொளி பண்ணி அதை ரெடி பண்ணினேன்." எனக் கூறியிருக்கிறார். இப்படி வந்த உலகநாயகன் பட்டத்தை தான் நடிகர் கமலஹாசன் துறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 





Advertisement

Advertisement