• Jan 29 2025

என்னங்க இப்படி உளறிட்டிங்க..! ரோகிணி விஷயத்தில் முத்து எடுத்த முடிவு என்ன?

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றது. அதற்கு காரணம் இந்த சீரியலில் ரோகிணி தன்னைப் பற்றிய பல விடயங்களை மறைத்து தான் மனோஜை திருமணம் செய்தார். அதனால் அதனை பாதுகாப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகின்றார்.

ஒவ்வொரு முறையும் இந்த சீரியலில் ரோகிணி வீட்டாரிடம் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் ஏதோ ஒரு வழியில் எஸ்கேப் ஆகி விடுவார். ஆனால் சமீப காலமாகவே ரோகிணியின் கள்ள வேலைகள் யாவும் அம்பலமாகி வருகின்றன.

d_i_a

இறுதியாக ஜீவாவிடம் வாங்கிய 30 லட்சம் பற்றிய ரகசியம் வீட்டார்கள் அனைவருக்கும் தெரியவந்தது. அதன் பின்பு மலேசியா செல்வதற்கு முத்து பிளான் போட்ட நிலையில் தனது அப்பா இறந்து விட்டதாக நாடகம் ஆடுகின்றார். அதை விஜயாவும் நம்பி விடுகின்றார், இதனால் மலேசியா ட்ரிப் கேன்சல் ஆகின்றது.


இதை தொடர்ந்து முத்துவின் போனை ஏற்கனவே ரோகிணி திருடி அதிலிருந்து சத்யாவின் வீடியோவை வெளிவிட்டார். இது மிகப்பெரிய பிரச்சினை ஆனது. குறித்த போனை வித்யாவிடம் கொடுத்து கடற்கரையில் வீச சொல்ல, வித்யா வழியில் அந்த போனை தொலைத்து விடுகின்றார். அதன் பின்பு செருப்பு தைக்கும் தாத்தா மூலம் அந்த போன் மீண்டும் முத்துக் கைக்கு வந்து சேருகின்றது.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த கதைக்களம் எவ்வாறு அமைய ப்போகின்றது என்பது தொடர்பில் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஏற்கனவே வித்யா வீட்டுக்கு சென்ற முத்து எதற்காக எனது போனை திருடினாய் என்று கேட்டிருந்தார். 

அதற்கு வித்யாவின் பதில் என்னவாக இருக்கும் என்பது பல ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.


எனினும் வித்யா கொலு பங்க்ஷன் நடைபெற்ற போது தெரியாமல் தனது பைக்குள் போன் வந்து விட்டதாகவும் அதை  மீண்டும் உங்களிடம் தர வந்த நிலையிலேயே அந்த போன் தொலைந்து விட்டதாக சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அவ்வாறு இல்லாவிடில் ரோகிணி பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்லி அவளின் வாழ்க்கையை காப்பாற்றுமாறு முத்துவிடம் உதவி கேட்பார் என்றும் நம்பப்படுகிறது.

ஆனாலும் அந்த போனில் இருந்து சத்யாவின் வீடியோ எப்படி லீக் ஆனது என்பதன் மூலம் வித்யாவை கிடுக்குப்பிடி பிடிக்க உள்ளார் முத்து. இதனால் வித்யா தன்னைத்தானே காப்பாற்ற போகின்றாரா? இல்லை ரோகினியை காப்பாற்ற போகின்றாரா? முத்துவை எப்படி சமாளிக்க போகின்றார்? என்பதை இனிவரும் எபிசோடுகளை பார்ப்போம்.

Advertisement

Advertisement