• Dec 27 2024

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இருந்து விலக என்ன காரணம்.. அதிர்ச்சி தகவலை சொன்ன ரிஹானா..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியல் தற்போது தான் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் திருமணம் ஆகாமல் இருந்த சரவணனுக்கு ஒரு வழியாக தங்கமயிலை பெண் பார்த்து நிச்சயதார்த்தம் வரை சென்று விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவருமே அவரவர் கேரக்டரில் செட் ஆகிவிட்ட நிலையில் பார்வையாளர்களும் அந்த கேரக்டர்களை தங்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். இந்த நிலையில் திடீரென ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இருந்து நடிகை ரிஹானா விலகுவதாக வெளியான செய்தியை நேற்று பார்த்தோம்.

இந்த தொடரில் இவரது கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென எதற்காக விலகுகிறேன் என்பதை அவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ குழுவினருக்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சனை இல்லை, என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தான் நான் இந்த தொடரில் இருந்து விலகுகிறேன்.

இந்த தொடரில் எனக்கு பிரேக் இல்லை என்றும் கதைப்படி எனது கேரக்டர் தொடர்ந்து பயணம் செய்கிறது என்றும், அதனால் என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறினார். மேலும் உங்களை மாதிரியே நானும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ரிஹானாவின் கேரக்டர் அவருக்கு ஒரு தனி அடையாளத்தை பெற்று தந்த நிலையில் திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவது குறித்து பார்வையாளர்கள் வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரிஹானாவுக்கு பதிலாக இந்த தொடரில் மாதவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’இனியா’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலிலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement