• Dec 25 2024

என்ன வைச்சு நிக்சனை டார்கெட் பண்ணீங்களா? அர்ச்சனாவை வெளுத்து வாங்கிய வினுஷா! சரியான பதிலடி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இதில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்களான அனன்யா,  வினுசா, அக்ஷயா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி  கொடுத்துள்ளனர்.


இந்த நிலையில், உங்களுக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது என்னை பெயரை பயன்படுத்தி நிக்சனை டார்கெட் பண்ணீங்க என வினுஷா அர்ச்சனாவை வெளுத்து வாங்குகின்றார்.


மேலும், இந்த விஷயத்தை அப்பவே பண்ணி இருக்கலாமே, இத மக்கள் மறந்துடுவாங்க என்று வேற சொல்லுறீங்க என வினுஷா கேட்க, அது சும்மா நிக்சனை கோவப்படுத்த செய்தது, நான் பயந்துட்டன், அது முடிஞ்சி போய்ட்டு என அர்ச்சனா சொல்லுகிறார்.

எனினும், அது முடிஞ்ச விஷயம் தான்..ஆனா அதுல என்ன வைச்சி கேம் ஆடுறீங்க என்பது போல அர்ச்சனாவை விளாசியுள்ளார் வினுஷா  

Advertisement

Advertisement