• Dec 26 2024

உயிர்-உலகத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்... குடும்ப புகைப்படத்தை வெளியிட விக்கி.. இதோ அந்த புகைப்படம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார் அதன் பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.


சில காலம் வரை காதல் பறவைகளாக வெளிநாடு சுற்றி வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். மேலும் திருமணமான நான்கே மாதத்தில் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களானர்.


இந்த சூழலில் பண்டிகை நாட்கள் என்றால் தனது குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் குடும்பப் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்போது இவர்களது போட்டோக்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் எகிறும்.


அந்த வகையில் நயன்தாரா இன்ஸ்டாகிராம் தொடங்கும் போது கூட தனது குழந்தைகளுடன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த சூழலில் இன்று தனது பிறந்த நாளை நயன்தாரா குழந்தைகளுடன் கொண்டாடுகிறார். வெளிநாட்டில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement