• Apr 17 2025

மணிகண்டனிடம் ஒரு மணி நேரம் கதை கேட்ட விஜய்.. கடைசியில் சொன்ன முடிவு தான் ஹைலைட்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது படத்தின் இயக்குனர் எச் வினோத் என்று கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டாலும் அவருக்கு கதை கூறிய இயக்குனர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

ஏற்கனவே விஜய் இடம் கதை கூறிய இயக்குனர்களாக வெற்றிமாறன், அட்லி, திரிவிக்ரம், ஆர்ஜே பாலாஜி, கார்த்திக் சுப்புராஜ் என ஒரு பெரிய கூட்டமே இருந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி மணிகண்டனும் விஜய்க்கு கதை கூறியதாக தெரிகிறது.

‘குட் நைட்’ ’லவ்வர்’ போன்ற படங்களில் நடித்து ஒரு நடிகராக நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் மணிகண்டன் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் தனது கனவாக உள்ளது என்றும் விரைவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் தனது நண்பர்கள் வட்டாரத்தில் கூறி வருகிறார்.

அந்த வகையில் எப்படியோ விஜய்யின் அப்பாயிண்ட்மென்ட்டை பெற்று விஜய் இடம் அவர் ஒரு மணி நேரம் கதை கூறியதாக தெரிகிறது. மணிகண்டன் கூறிய கதையை மிகவும் பொறுமையாக கேட்ட விஜய், கதை சூப்பராக இருக்குது, என்றும் ஆனால் அதே நேரத்தில் தனது வயதுக்கு இந்த கதை செட்டாகாது, தன்னைவிட இளமையான ஒரு நடிகரை வைத்து இந்த படத்தை எடுங்கள், கண்டிப்பாக இந்த படம் வெற்றி ஏறும் என்று மணிகண்டனுக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விஜய்க்கு கதை சொல்ல வந்தால் அவர் வேறு ஒரு நடிகரை கை காட்டுகிறாரே என்று மணிகண்டனுக்கு அதிருப்தி ஏற்பட்டாலும் தன்னுடைய கதை அவருக்கு பிடித்து விட்டது என்பது மணிகண்டனுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி தான்.

இந்த நிலையில் மணிகண்டன் இந்த கதையில் தானே நடிக்கலாம் என ஒரு பக்கம் யோசனை இருந்தாலும் இன்னொரு பக்கம் கவின், ரியோ ஆகியோர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் மணிகண்டனை ஒரு இயக்குநராக மிக விரைவில் பார்க்கலாம் என்றும் அவருடைய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement