• Dec 26 2024

பெண்கள் சுதந்திரம் தான் மெய்ன்... இது அவங்களுக்கும் போய் சேரனும்... பூஜையுடன் ஆரம்பமாகிய ரட்சிதாவின் அடுத்த திரைப்படம்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

"எக்ஸ்ட்ரீம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை உடன் இன்று ஆரம்பமானது. அந்த திரைப்படத்தின் படக்குழுவினர் ஒவ்வொருவரும் படம் தொடர்பாக கதைத்திருந்தனர். இந்நிலையில் நடிகை ரட்சிதா தனது புதிய திரைப்படம் குறித்து  கதைத்திருந்தார். 


"பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரின் மூலம் அறிமுகமான  நடிகை ரட்சிதா அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.  எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்த தினேஷ், 3வது ரன்னராக வெற்றி பெற்று வெளியேறினார். இந்த நிலையில், நடிகை ரட்சிதா அடிக்கடி வீடியோ, போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார் அப்டி தான் நடிக்க இருக்கும் புது திரைப்படம் தொடர்பாகவும் புகைப்படங்களும் பகிர்ந்திருந்தார்.


இன்று அந்த திரைப்படத்தின் பூஜை ஆரம்பமாகி உள்ளது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரச்சிதா  ‘பெண்களுக்கான சுதந்திரம் வேண்டும் அதனால வர்ற பிரச்சனைகள்தான் இந்த படத்தோட கதை. இது பெண்களை மட்டும் சார்ந்து உள்ள படம் இல்ல ஆண்களுக்கும் போய் சேரனும் என்றுதான் எடுத்துட்டு இருக்காங்க.


எனக்கு வந்து இந்த படத்துல ஒரு கோப் ரோல் அராஸ்மெட் நடக்குற பெண்னை கண்டு பிடிச்சி எப்படி விசாரணை செய்து அத கண்டு புடிக்கிறம் என்பதை தான் நான் இந்த படத்துல எடுத்து செய்துட்டு இருக்கன். இப்ப பூஜை ஓட ஆரம்பமாகிட்டு இனி தான் படப்பிடிப்பு எல்லாம் விறுவிறுப்பாக இருக்குபோது என்று கூறியிருந்தார். 

 

Advertisement

Advertisement