• Apr 24 2026

டபுள் ஆக்‌ஷனில் களமிறங்கிய யாஷ்.. அடுத்த கேரக்டரின் பெயரும் வெளியானது!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்துள்ள பான்-வேர்ல்ட் திரைப்படமான ‘டாக்ஸிக்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்த படம், ஐந்து மொழிகளில் டீசராக வெளியாகியுள்ளது. முன்பே வெளியான யாஷின் கேரக்டர் டீசர் ஹிட்டான நிலையில், தற்போது வந்துள்ள இந்த புதிய டீசர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மொத்தமாக 1 நிமிடம் 55 விநாடிகள் கொண்ட இந்த டீசரில், 'இந்த முறை யுத்தமே வேறு' என்ற ஒரே வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.  ஆக்‌ஷன், மாஸ் சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் யாஷ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

குறித்த டீசரைப் பார்த்தால், யாஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் யாஷுடன் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


மேலும் பாலிவுட் நடிகைகள் ஹூமா குரேஷி, கியாரா அத்வானி ஆகியோரும் நடித்துள்ளனர். ஆனால் டீசரில் நயன்தாராவை ஒரு ஃபிரேமிலும் காட்டாதது அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

இந்த நிலையில்,  'ராயா' என்ற கதாபாத்திரத்தை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், 'டிக்கெட்' என்ற மற்றொரு கதாபாத்திரத்தின் பெயரையும் படக்குழுவினர் அறிவித்து போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.  தற்போது குறித்த போஸ்டரும் பலரது கவனத்தை பெற்று வருகிறது. 

தாடி இல்லாத புதிய லுக்கில் யாஷ் தோன்றியிருப்பதும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ‘KGF 2’க்கு பிறகு 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் யாஷின் இந்த படம், மார்ச் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


Advertisement

Advertisement