• Apr 23 2026

மஞ்சள் சேலையில் ஜொலித்த பிரியங்கா மோகன்.. ரசிகர்களின் மனதை அலைபாய வைத்த போட்டோஸ்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து வரும் பிரியங்கா மோகன், தனது நடிப்புத் திறமையால் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் பகிரும் ஸ்டைலான புகைப்படங்களாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகப் பக்கங்களில் புதிய புகைப்படங்களை வெளியிடும் அவர், இளைஞர்களிடையே தனித்துவமான நடிகையாக பார்க்கப்படுகிறார்.


இந்நிலையில், சமீபத்தில் அவர் மஞ்சள் நிற புடவையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பாரம்பரியமும் நவீன ஸ்டைலும் கலந்த அந்த தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கமெண்ட்ஸினையும் பெற்று வைரலாகி வருகின்றன. 

பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்துவருகிறார். அவர் நடித்த பல திரைப்படங்கள் விமர்சகர்களிடமும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement