• Dec 25 2024

ஆமா... நான் தான் புல்லி கேங்கிற்கு ஹெட்டு.. நல்லா ட்ரெய்னிங் கொடுத்து தான் உள்ள அனுப்பினான்! புதிய சர்ச்சையை கிளப்பிய வனிதா

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படுபவர் தான் வனிதா விஜயகுமார்.  இவரது பேச்சும் நடவடிக்கையும் எப்பவுமே அதிரடியாக தான் காணப்படும்.

தனது பிள்ளைகளுடன் தனித்து வாழும் வனிதா விஜயகுமார், அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையான கருத்துக்களை கிளப்பி விடுவார்.

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பத்திலிருந்து தற்போது வரையில், மாயாவுக்கு ஆதரவாகவே அவரது வீடியோக்களும் கருத்துக்களும் காணப்பட்டது.


மேலும், அர்ச்சனா பிஆர் வைத்து தான் பிக் பாஸ் டைட்டில் வென்றதாக  ஆணித்தரமாக சொல்லி வருகிறார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் புல்லி கேங் என அழைக்கப்பட்ட  மாயா டீம்க்கு நான் தான் லீடர் என புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார் வனிதா  விஜயகுமார்.


அதன்படி அவர் கூறுகையில், இந்த  முறை நான் மாயாவுக்கு பிஆர் ஹெட். போன முறை ஆசிம்க்கு பிஆர் ஹெட்டாக இருந்தன். இப்போ மாயாவுக்கு..

 நான் தான் எல்லா எக்ஸ் கன்டென்ஸையும் சேர்த்து வச்சு ட்ரெய்னிங் கொடுத்து உள்ள அனுப்பி இருந்தனாம்...நானும் இப்போ ஆமா என்று தான் சொல்லுறன். அப்படியே வச்சு கொள்ளுங்க.. என சமூக வலைத்தளங்களில் கிளம்பிய கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.

 

Advertisement

Advertisement