• Dec 25 2024

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு தொடரும் வெற்றிக் கொண்டாட்டங்கள்! சற்றுமுன் வெளியான வைரல் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் அர்ச்சனா, புதிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், குறித்த வீடியோ படு வைரலாகி உள்ளது

பிக் பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்றவர் தான் அர்ச்சனா. இடையில் இருந்து சென்றதால் என்னவோ அர்ச்சனா ஏற்கனவே இருந்த போட்டியாளர்களை விட சற்று சிறந்து விளங்கினார்.

ஆரம்பத்தில் அழுது புலம்பி நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என பேசி இருந்தாலும், நாளடைவில் தன்னை முழுமையாக மாற்றி, டைட்டில் வின் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது நாட்களை சிறப்பாக நகர்த்தி வந்தார்.


பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுடனும் அளவாக பேசி தனது ஆட்டத்தை நகர்த்தியதோடு, தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்து வந்தார்.

இதை தொடர்ந்து 105 நாட்களைக் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தான், வெற்றி வாகையும் சூடிக் கொண்டார்.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியோடு திரும்பிய அர்ச்சனா தற்போது, தனது கொண்டாட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளதோடு, அவரது சினிமா பயணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்தும் சொல்லி வருகின்றனர்.


Advertisement

Advertisement