• Dec 26 2024

சொல்லாம பண்ணினதுக்கே இப்படி செஞ்சிட்டிங்களே! பிக் பாஸ் எலிமினேஷனுக்கு பின் ரவீந்தர் வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஒரு வாரத்தை கடந்துள்ளது. இந்த சீசனில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவிலேயே காணப்பட்டது. அவர் உலகநாயகனின் இடத்தை பூர்த்தி செய்வாரா இல்லையா என்பதை அறிவதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் வாரத்திலேயே தனக்கான தனி இடத்தை நிரூபித்து விட்டார் விஜய் சேதுபதி. அதன்படி போட்டியாளர்களை அதிகமாக பேசவிடாமலும் தானும் அதிகமாக பேசாமலும் குறுகிய நேரத்திற்குள்ளேயே தரமான பதிலடிகளை கொடுத்து ஆடியன்ஸின் பாராட்டல்களை பெற்றுள்ளார்.

இந்த சீசனில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் முதல் எலிமினேட் நடைபெற்றது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது. எனினும் ஐந்து நாட்கள் கழித்து பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்றிருந்த சாச்சனா மீண்டும் உள்ளே வந்திருந்தார். தற்போது அவர் தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகின்றார்.


இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலாவதாக எலிமினேஷன் ஆகியுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு தனது முதலாவது வீடியோவை வெளியிட்டு அதில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரவீந்தர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இவர் பிக் பாஸ் வீட்டில் சிறிது காலம் தாக்குப் பிடிப்பார் என்று நம்பிய நிலையில் முதலாவதாக எலிமினேட் ஆகி வெளியேறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement