• Dec 26 2024

நீங்க ரொம்பவும் எஸ்ஸ்ப்ட் ஆகிட்டீங்க.. நகைகளுடன் எஸ்கேப் ஆகும் கண்ணன்! சவாலை சமாளித்த பாக்கியா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

ராஜி ஓடிப்போன விஷயம் தெரிந்து எல்லாரும் தப்பு தப்பாக பேசுகின்றார்கள். அப்போ பாண்டியன் வந்து கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்க என அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார்.

ஹோட்டலில் இருக்கும் ராஜி, போனில் வீட்டாரின் வாய்ஸ்களை கேட்டு அழுகிறார். தனது அம்மா வீட்டுக்கு ராஜி போன் செய்ய, கண்ணன் போனை எடுத்து உடைக்கிறார். பிறகு ராஜியை சமாதானம் செய்து, நாளைக்கு கல்யாணம் செய்ய எல்லாம் ரெடி பண்ணுறன் என சொல்கிறார்.

இன்னொரு பக்கம் கோமதி சமையலில் பட்டையை கிளப்ப, எழில் மினிஸ்டர் அனுப்பிய பெண்களிடம் வேலை வாங்குகிறார். அப்போது ஹோட்டல் மேனேஜர் இன்னும் 200 பேருக்கு சமைக்க சொல்ல, குழம்பி நிற்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் எப்படி சமைக்கிற என யோசிக்கிறார்.இறுதியாக சப்பாத்தி பண்ண திட்டம் போடுகிறார்கள்.

மறுபக்கம், ராஜிஜை எல்லாரும் தேடியலைய, கண்ணன் கொண்டு சென்ற நகைகளை வேறு பையில் போட்டு எடுத்துக் கொண்டு வெளியே போகிறார். இடையில் வெளியில் வரும் போது எழிலுடன் சண்டை போடுகிறார்.

மாப்பிளை வீட்டில் இருந்து வந்தும், முத்து குடும்பத்தை அவமானப்படுத்துகின்றார்கள். இறுதியாக கல்யாணத்திற்கு வந்த அனைவரிடமும் இந்த கல்யாணம் நடக்காது. என்ன மன்னிச்சிடுங்க என முத்து சொல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement