• Dec 26 2024

நீ செத்துப்போ.. நடுரோட்டில் செழியனுடன் மோதிய ஜெனியின் அப்பா! பிரச்சனைகளுக்கு இடையில் பாக்கியாவுக்கு அடித்த அதிஷ்டம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றை தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

நீதிமன்ற வாசலில் பாக்கியாவும் எழிலும் இருக்க, அந்த நேரத்தில் ஜெனியின் அப்பாவும் வந்து ஜெனியை தேடிவிட்டு, பாக்கியாவிடம் வந்து ஜெனி எங்க என்று கேட்கிறார்.


மீண்டும் மீண்டும் ஜெனியை பற்றி கேட்க, எழில் அவங்க செழியன் கூட கதைக்க போயிட்டாங்க, பத்திரமா வீட்ட வருவா என சொல்ல, கோவப்பட்டு போகிறார் ஜோசெப்.


மறுபக்கம்,  ஜெனியுடன் பேசிய செழியன்,உனக்காக என்ன என்டாலும் பண்ணுவன், என்ன மன்னிச்சுடு என கெஞ்ச, அவர் எதுவும் சொல்லவில்லை. பாப்பா வீட்டுல என்னை தேடுவா என சொல்லி கிளம்புகிறார்.


இதை தொடர்ந்து பாக்கியாவை நேரில் வருமாறு மினிஸ்டர் அழைக்க, பதற்றத்துடன் செல்கிறார் பாக்கியா.


ஜெனியை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுவிட்டு வாசலிலும் நின்று கெஞ்சுகிறார் செழியன். இப்ப நான் என்ன செய்ய என கேட்டுக் கொண்டு இருக்க, நீ செத்துப்போ என சொல்லிக் கொண்டு வருகிறார் ஜெனியின் அப்பா. பிறகு அவரை சமாதானம் செய்து உள்ளே கூட்டிப் போகிறார் ஜெனி.


இதையடுத்து, மினிஸ்டருடன் பாக்கியா பேசும் போதும், அடுத்த வாரம் என் தொகுதில 3 நாள்  கட்சி மாநாடு நடக்க போகுது, அதுக்கு நீங்க தான் கேட்டரிங் பண்ண போறீங்க என வாய்ப்பு கொடுக்கிறார்.


Advertisement

Advertisement