• Dec 25 2024

உங்களுக்கு கோபி மேல லவ் இருக்கு.. நடிக்காதீங்க.!! கொளுத்திப் போட்ட ராதிகா

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி தனது அம்மாவுடன் வீட்டிற்கு கிளம்ப, பாக்யா ஈஸ்வரியிடம் அவரை வீட்டுக்கு கூட்டி வர வேண்டாம் என்று சொல்லுகின்றார். ஆனாலும் என்னுடைய பிள்ளையின் உயிரில் விளையாடாதே என்று மிகவும் எமோஷனலாக பேசி கோபியை வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார்.

கோபியும் அங்கிருக்கும் ராதிகாவை கணக்கெடுக்காமல் தனது அம்மா பிள்ளைகளுடன் காரில் செல்கின்றார். இதன் போது பாக்யாவையும் விட்டுவிட்டு செல்கின்றார்கள். அங்கு வந்த ராதிகா, இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க.. கோபி மேல உங்களுக்கு பாசம் இருக்குது.. அதனாலதான் ஹாஸ்பிடல் இருந்து பார்த்துக் கொண்டீங்க.. நடிக்காதீங்க என்று சொல்லுகின்றார்.

d_i_a

இதை கேட்ட பாக்கியா உங்களுக்காக நான் எங்க வீட்டுல சண்டை போடுறேன்.. எல்லாத்தையும் நேர்ல இருந்து பார்த்துட்டு நீங்க இப்படி சொல்றீங்கன்னா உங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்று பதிலடி கொடுத்துவிட்டு செல்லுகின்றார்.


அதன் பின்பு கோபியை வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு ஜெனியை ஆர்த்தி தட்டு எடுத்து வருமாறு சொல்ல, தனக்கு எதுவும் தெரியாது என்று ஜெனி மறுக்கின்றார். இதனால் ஈஸ்வரியே ஆர்த்தி எடுத்து கோபியை உள்ளே அழைத்துச் செல்லுகின்றார். பாக்கியா அங்கு வரவும் கோபிக்கு சாப்பாடு தனியாக செய்து கொடுக்குமாறு சொல்ல, நீங்க தானே கூட்டி வந்தீங்க நீங்க தான் அவரை பார்த்துக் கொள்ளணும்.. அவர் அந்த ரூம விட்டு வெளியே வந்து எந்த நாட்டாமையும் பண்ணக்கூடாது என்று ஈஸ்வரியை திட்டி விட்டுச் செல்கின்றார்.

மறுபக்கம் வீட்டுக்கு சென்ற ராதிகா, அவர் தனது அம்மாவுடன் பாக்கியாவின் வீட்டுக்குச் சென்றதாக கமலாவிடம் சொல்ல, கமலா நேரே பாக்யா வீட்டுக்கு செல்கின்றார். அங்கு வாசலில் பாக்கியா நிற்க, எல்லாரும் கூட்டுக் களவாணி தானே என்று திட்டுகின்றார். அதற்கு பாக்கியா, எது கதைக்கிறதா இருந்தாலும் போய் ஈஸ்வரியுடன் கதைக்குமாறு சொல்லுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement