• Dec 25 2024

ஜாக்கிசான் மகன் ஜெயிலுலயா ? ஏன் சொத்துல இருந்து ஒரு பைசா கூட என் மகனுக்கு போகாது! மாஸ் காட்டிய ஜாக்கிசான்

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

அன்றிலிருந்து இன்றுவரை சிறுவர்களின் பேவரட் நடிகராக இருப்பவர் ஜாக்கிசான் ஆவார். 80s , 90s என ஆரம்பித்து இன்றய 2k கிட்ஸ் வரையிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஆவார். புரூஸ்லீயை அடுத்து கராத்தே , குங்க்பூ , ஸ்டண்ட் காட்சிகள் என்றாலே ஞாபகம் வருபவர் ஜாக்கிசான் எனலாம். இந்த நிலையிலேயே இவர் இன்று தனது 70 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார்.


ஸ்டண்ட் மேன் ஆக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர் தொடந்து பல திரைப்படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். ஸ்டண்ட் மேன் ஆக இருந்தே சினிமாவுக்குள் வந்ததினால் இவர் ஹீரோவாக நடிக்கும் அனைத்து படங்களிலும் பல கடினமான காட்சிகளை கூட டூப் போடாமல் எடுக்க கூடியவர் இவர். பல சினிமாவில் நடித்து பிரபலமாக இருந்த இவர் உலகம் முழுவதும் அறியப்பட்டது ஜாகிச்சிசான் என்ற கார்ட்டூன் நிகழ்ச்சியின் மூலமே ஆகும். 


இவருக்கு ஒருமகனும் ஒரு மக்களும் உள்ளது. சீனாவின் பிரபல பாடகரும் , நடிகருமான இவரது மகன் ஜேய்சி சான் தகாத உபகரணங்களின் பழக்கவழகத்துக்கு அடிமையாகி போலீசிடம் மாட்டிக்கொண்டார். நீதிமன்றம் இவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதித்திருந்தாலும் ஜாக்கிசான் நான் அவனை வெளியில் எடுக்க போவதில்லை அவன் திருந்த வேண்டும் சிறையில் இருந்தே திருந்தட்டும்  எனவும் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி அவனது திறமையின் மூலம் அவனே வாழ்க்கையில் முன்னேறட்டும் என் சொத்து முழுவதும் என் மக்களுக்கே எனவும் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement