• Dec 25 2024

ஜீ தமிழ் டாப் சீரியல்களில் தொடரும் சினிமா தாக்கம்! வாய்விட்டு கதறும் நேயர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர்களுக்கு என்று ஒரு தனித்துவமான இடமுண்டு. ஆனால் தற்போதைய நாட்களில் அவை சினிமா படங்களின் சாயலை கொண்டு நகர்வதாக நேயர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திக்கை தீபம், மாரி மற்றும் சீதாராமன் சீரியல்கள் முன்னணியில் திகழ்கின்றன.

அதன்படி, கார்த்திகை தீபம் தொடரில் தற்போது முத்து படத்தில் வரும் காட்சியை போல அனைவரும் தோட்டத்தில் ஒன்று கூடுகின்றனர். லெட்டர் மூலம் பரவும் தகவல் இறுதியில் எல்லாரிடமும் வலம் வந்து கார்த்தியின் மீதும் விழ அவன் தீபா என்று நினைத்து கொள்ளகிறான். அந்த நேரம் பார்த்து பாட்டி வந்ததும் அதை தீபா மீது தூக்கி போட தீபா கார்த்திக் எதோ பேச ஆசைப்படுவதாக புரிந்து கொள்ள கடைசியாக அந்த லெட்டர் பரமேஸ்வரி பாட்டி கையில் சிக்கி விடுகிறது. இதை படித்து பார்த்த பாட்டி கடுப்பாகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


அதேபோல தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் படங்களில் வருவது போல சாமியாடி உண்மையை வர வைக்கிறார் சீதா. அதன்படி, முழுக் குடும்பத்தையும் கோவிலுக்கு வர வைத்து அங்கு சாமியார் வேடத்தில் இருப்பது துரை தான் என்று தெரியால் தாம் செய்த தப்பை ஒத்துக் கொள்கின்றனர் அந்த மூன்று சில்வண்டுகளும்.  இதைக் கேட்டு மகா உட்பட எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


அடுத்ததாக மாரி சீரியல். இது தொடர்பில் சொல்லவே வேண்டாம். ஏனென்றால் இத்தொடர் ஆரம்பமான நாள் முதல் சாமி, கருப்பன், பாம்பு, இறந்த தேவி அம்மா என சுற்றி சுற்றி கதையை நகர்த்தி செல்கின்றனர். இறுதியாக இடம்பெற்ற எபிசோடில் பாம்பை வைத்து கதையை வச்சு செய்கின்றனர். இவற்றை எல்லாம் சலிக்காமல் பார்த்து வந்த ஜீ தமிழ் நேயர்கள் ஒரு கட்டத்தில்' டேய் என்னடா இப்டி பண்றிங்களே மா' என சோர்ந்து விட்டனர்.


Advertisement

Advertisement