• Dec 26 2024

புதிய டிவி சீரியலில் இணையும் நிஜ தம்பதிகள்.. எந்த டிவி? எப்போது ஆரம்பம்?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

ஜீ டிவியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் நடித்ததன் மூலம் காதல் வசப்பட்டு அதன்பின்  திருமணம் செய்து கொண்ட ஜோடி, மீண்டும் ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஜீ டிவியில் ஒளிபரப்பான ’திருமணம்’ என்ற சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. இந்த தொடரில் நடிக்கும் போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது என்பதும் அதன் பின் கடந்த 2011 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னர் ’ராஜா ராணி 2’ சீரியலில் சித்து முக்கிய கேரக்டரில் நடித்த நிலையில், ’ரஜினி’ என்ற தொடரில் ஸ்ரேயா நடித்தார். இருவரும் சீரியல்களிலும் ரீல்ஸ்களிலும் பிசியாக உள்ளனர்.



இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சித்து மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரும் ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் இந்த தொடரின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தொடரின் டைட்டில், முன்னோட்ட வீடியோ மற்றும் ஒளிபரப்பாகும் நேரம் ஆகியவை இன்னும் ஒரு சில நாட்களில் ஜீடிவி வெளியிடும் என்றும் அநேகமாக ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கி செப்டம்பர் மாதம் இந்த தொடர் ஆரம்பமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement