ஜீ தமிழின் பிரபல தொலைக்காட்சித் தொடர் சத்யா1,2 மூலம் பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கும் நடிகை ஆயிஷா, தற்போது சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 2017ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்கள் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ஆயிஷா, தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.
அவரின் முதல் பெரிய வாய்ப்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் தொடர் ஆகும். அதன் பின்னர், சன் டிவியின் மாயா தொடரிலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், ஆயிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். வெப் சீரிஸ் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவரது ஸ்டைலிஷ் தோற்றமும், கியூட் அப்டேட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆயிஷாவின் இந்த வைரல் புகைப்படம் பலரையும் கவர்ந்து, குறுகிய நேரத்தில் லைக் மற்றும் கமெண்ட்களில் வெள்ளமே பெருக்கி வருகிறது.
Listen News!