• Aug 06 2025

மலை போல குவியும் படவாய்ப்புகள்... ஏழுமலையானுக்கு நன்றி செலுத்திய ஜெயராம்.!

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றால் நம்மில் பெரும்பாலானோருக்கு மனதில் வருவது பக்தி, ஆனந்தம் மற்றும் ஆன்மிக அமைதி. தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் பல பிரபலங்கள் அடிக்கடி இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. 


இந்நிலையில், பிரபல நடிகரும், பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் கலைஞருமான ஜெயராம் அவர்களும், அவருடைய மகன் காளிதாஸும் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர்.

பல படங்கள் மற்றும் திட்டங்களில் பிஸியாக இருந்தாலும், ஜெயராம் எப்போதும் தனது ஆன்மிக நம்பிக்கைகளை முக்கியத்துவத்துடன் வைத்திருப்பவர். இதை பல வருடங்களாகவே மக்கள் கவனித்து வருகின்றனர்.


தமது மகனுடன் இணைந்து திருப்பதி கோயிலுக்குச் சென்ற அவர், மிகவும் எளிமையாக, பக்தி பூர்வமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரர் சுவாமியை தரிசித்து மனஅமைதியை பெற்றுள்ளார். அதன்போது ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அந்த போட்டோஸ் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement