• Jun 06 2025

DJDயில் நடுவராக சினேகா இல்லை.. ! அவருக்குப் பதிலாக புதிய நடிகை..! – காரணம் இது தானா..?

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் ரசிகர்களிடம் அதிக கவனத்தையும், திரைப்பார்வையையும் பெற்று வருகின்றது. தற்போது மூன்றாவது சீசன் செம விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.


விஜய் மற்றும் மணிமேகலை இணைந்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் பிரமாண்டமான மாறுபாடுகளும், போட்டியாளர்களின் ஆட்டமும், நடுவர்களின் ரியாக்ஷன்களும், நிகழ்ச்சியை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கின்றன.

நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசொட்டில் ‘தரலோக்கல் ரவுண்ட்’ எனும் பிரத்தியேக சுற்று இடம்பெற்றுள்ளது. இதில், போட்டியாளர்கள் ஹிட்டான பாடல்களுக்கு செம ஆட்டத்தைக் கொடுத்து, நடுவர்களையும், பார்வையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.


இந்த ஒளிபரப்புகளில் முக்கிய நடுவராக இருப்பவர் நடிகை சினேகா. எப்போதும் contestants-க்கான ஆழமான விமர்சனங்கள், நல்ல அப்சர்வேஷன்கள், பாசமிக்க பேச்சுகள் என எல்லா கோணங்களிலும் shine பண்ணும் இவர், இந்த வார எபிசொட்டில் காணப்படவில்லை.

இதைப் பார்த்த ரசிகர்கள், “என்னம்மா சினேகா மேடையில் இல்லையா?” என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். பின்னர் வெளியான தகவலின்படி, சினேகா தற்போது லண்டனில் நடைபெறும் ஒரு பிரமாண்ட கடைத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் மட்டும் புறந்தள்ளப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.


சினேகாவுக்கு பதிலாக இந்த வாரம் பிரபல நடிகை நமிதா கலந்து கொண்டிருக்கிறார். இளசுகளின் கனவுக் கன்னியாக ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கலக்கிய நமிதா, இந்த வாரம் நடுவராக வந்து ஒரு கவர்ச்சி உணர்வைச் சேர்த்துள்ளார்.


Advertisement

Advertisement