• Aug 18 2025

திருச்சிற்றம்பலத்தின் மூன்று ஆண்டுகள் நிறைவு...!பிரகாஷ் ராஜின் உருக்கமான பதிவு வைரல்..!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தனக்கென தனி இடம் பிடித்தவர் பிரகாஷ் ராஜ். திரைப்பாடங்களில் தீமையை பிரதிநிதித்துவப்படுத்தியதாலும், உண்மை வாழ்வில் தனது சமூகக் கடமைகளை துணிவுடன் பேசியதாலும், ரசிகர்களிடையே அவருக்கு தனி மரியாதை உள்ளது.


நடிகராக மட்டுமல்லாது, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரகாஷ் ராஜ் பல பரிணாமங்களில் செழித்து வருகிறார். சமூக, அரசியல் விடயங்களிலும் தனது அபிப்பிராயங்களை நேராக பகிர்வதிலும் இவர் தவறவில்லை. சமூக நீதி, மொழி, கலாசாரம் குறித்தும் அவர் எடுத்துக்காட்டாக செயல்படுகிறார்.


இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ஒட்டி, நடிகர் பிரகாஷ் ராஜ் தனது X தள பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். “மனதில் linger ஆகும் திரைப்படம்… மனம் கனிந்த பயணம்… திருச்சிற்றம்பலம் – மூன்று ஆண்டுகள்!” எனக் குறிப்பிட்ட அவர், இயக்குநர் மித்ரன் ஜவகர், நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவின் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement