• Dec 26 2024

உயிர் பிழைக்க படகுக்குள் மோதிக்கொள்ளும் 10 பேர்.. பசியோடு மிரளும் சுறா..! இறுதியில்..? வெளியானது 'Boat' பட டீசர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'போட்'.

இந்த படத்தில் நடிகர் யோகி பாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதோடு, கௌரி ஜி கிஷன், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ், மதுமிதா, கொள்ள புலி லீலா, அக்ஷதா தாஸ், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

1943 ஆம் ஆண்டு, இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்த காலத்தில்... ஜப்பான் மெட்ராஸ் மாகாணத்தின் மீது குண்டு விழ.. உயிர் பிழைக்க முன் பின் அறியாத அந்த 10 பேர் ஒரு படகில் ஏரி, ஒரு வங்காள விரிகுடாவின் பக்கம் ஒதுங்குகின்றனர்.


அப்போது பாரம் தாக்காமல் படகு கவிழ பாக்கிறது. அந்த நேரத்தில் பசியோடு ஒரு சுறா படகை சுற்றுகிறது. படகு கவிழாமல் இருக்க யாரேனும் மூன்று பேர் கடலில் குதிக்க வேண்டும் என்ற கட்டாயம்.

உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் ஒவ்வொருவர் உள்ளிருக்கும் மிருகம் வெளிவர பாக்கிறது. அதில் நடக்கும் மோதல்.. இவ்வாறு படகில் செல்லும் 10 பேரை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படகு பயணத்தில் அனைவரும் எப்படி தப்பிக்கிறார்கள்? இறுதியில் என்ன நடக்கிறது என யூகிக்க முடியாத கதைகளத்தில் இப்படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை, மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Advertisement

Advertisement