• Dec 26 2024

18 வயது நடிகை தான் வேணும்.. அடம்பிடித்து படத்தில் நடிக்க வைத்த விஜய் தேவரகொண்டா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் தேவரகொண்டா நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக 18 வயது இளம் நடிக்க இருப்பதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த அந்த நடிகை தற்போது 34 வயது விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12வது படத்தில் நடித்து வருகிறார். கௌதம் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா  ஜோடியாக நடிக்க ஏற்கனவே பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா ஒப்பந்தமான நிலையில் தற்போது சாரா அர்ஜுன் என்பவர் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சாரா அர்ஜுன், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சிறுவயது குந்தவை என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் 18 வயதே ஆன இவர் தற்போது 34 வயதான விஜய் தேவரகொண்டாவுக்கு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் நடிக்க இரண்டாவது நாயகி தேடிக் கொண்டிருந்த நிலையில் அவரே தான் சாரா அர்ஜுனனை பரிந்துரை செய்ததாகவும் அவர் வலியுறுத்தியதன் காரணமாகத்தான் சாரா அர்ஜுன் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் 18 வயது நடிகை உடன் நடித்த ஆக வேண்டும் என்ற விஜய் தேவரகொண்டா தனது ஆசையை பூர்த்தி செய்து கொண்டதாக தெரிகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுனுக்கு விஜய் தேவரகொண்டா தனது படத்தில் நாயகி வேடம் கொடுத்ததால் ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement