• Dec 26 2024

இந்திரஜாவுக்கு நலங்கு வைக்கும் ஃபங்ஷனுக்கு 2 கோடி செலவாச்சா? Robo Shankar மனைவி சொன்ன ஷாக்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. பிரபல டிவி சேனல் ஒன்றில்  சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். மேலும் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானர்.

தனது தாய்மாமனான கார்த்திக் என்பவரைகடந்த 24ம் திகதி  திருமணம் செய்துள்ளார் இந்திரஜா. இவர்களின் திருமணம் மதுரையில்  கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் நடந்த திருமண ரிசப்ஷனில்  பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.


இந்த நிலையில், இந்திரஜாவுக்கு நடைபெற்று முடிந்த நலங்கு வைக்கும் சடங்கு நிகழ்ச்சிக்கு சுமார் இரண்டு கோடி செலவழிந்ததா? என தனியார் youtube சேனல் ஒன்று இந்திரஜாவின் அம்மா பிரியங்காவிடம் கேள்வி எழுப்பி உள்ளது.அதற்கு அவர் காரசாரமாக பதில் அளித்துள்ளார்.


அதாவது, ஆமா இந்திரஜாவின் நலங்கு சடங்கு செய்ய 2 கோடி முடிஞ்சுது. இந்த பக்க தெருவுல ஒரு கோடி,  அந்தப் பக்கம் தெருவுல ஒரு கோடி. மொத்தமா சேர்ந்து நானும் ரோபோ சங்கரும் தெருவுல துண்டை போட்டுட்டு இருந்தோம். யார் என்ன சொன்னாலும் நம்புவீங்களா? இப்படித்தான் ஹோம் டூர் என்று வந்து கொக்க காட்டினாங்க.. அதுல ரெண்டு லட்சம் பைன் கட்டினோம். மேலும் இப்போ நான் கட்டின புடவையை வெறும் 450 ரூபாய். இது 2 கோடியா? என பேசி உள்ளார் பிரியங்கா ரோபோ சங்கர்.


Advertisement

Advertisement