• Dec 27 2024

90 களில் புகழான சர்ஃப் எக்ஸல் விளம்பர நடிகை திடீர் உயிரிழப்பு! திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

1989 ஆம் ஆண்டுகளில் சூப்பர் ஹிட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான, உதார் நிகழ்ச்சியில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து  புகழ் பெற்றவர் தான் கவிதா சௌத்ரி.

1990களில் மிகப்பிரபலமான இவரது சர்ஃப் எக்ஸல் விளம்பரங்களிலும் நடித்து, அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இவர் அதில் லலிதாஜி என்ற கேரக்டரில் சர்ப் எக்ஸல் விளம்பரத்தில் பேசுவார். அது ரொம்பவும் ரீச் ஆனது.

அந்த காலத்தில் இவரது விளம்பரத்தை பார்த்தே ஏராளமானோர் குறித்த பவுடரை வாங்கி பாவித்துள்ளார்களாம்.


இவ்வாறு ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்த நடிகை கவிதா சௌத்ரி, உடல் நலக்குறைவு காரணமாக அமிர்தசரஸின் பார்வதி தேவி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில வருடங்களாகவே புற்று நோயாள் பாதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வந்த கவிதா சௌத்ரி தற்போது உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்த திரை பிரபலங்கள் அனைவரும் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் தமது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement