• Apr 18 2026

'சியான் 62' படத்தில் இணையும் பிரபல மலையாள ஹீரோ! வெளியான அப்டேட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விக்ரம் நடிப்பில் சித்தா இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில், ஜி.வி  பிரகாஷ் இசையில் உருவாகும் திரைப்படம் தான் 'சியான் 62'.

இந்தப் படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மலையாளத்தில் 100க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர்க ஒருவர் 'சியான் 62' படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி சியான் விக்ரம் நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகரான சுராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' 'டிரைவிங் லைசன்ஸ்' 'பைனான்ஸ்' உட்பட நூறு படங்களுக்கு மேல் மலையாளத்தில் நடித்து பிரபலமானார்.

எஸ் ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement