• Dec 26 2024

ஆனந்த் அம்பானியின் எக்ஸ்பென்சிவ் வாட்சை பார்த்து வியந்த மார்க் பேமிலி! விலைய கேட்டா தலையே சுத்தும்! வீடியோ உள்ளே..!!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

அம்பானி வீட்டு கல்யாணம் என்றால் சும்மாவா என உலகமே  வியக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாகவும், ஆடம்பரமாகவும் நடந்து வருகிறது ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் பங்க்ஷன்.

ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் 12ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக  சுமார் 1000 கோடி செலவில் ப்ரீ வெட்டிங் விழா மார்ச் முதலாம் தேதி முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் உள்ள தொழிலதிபர்கள், பிரபலங்கள், நடிகர்கள், நட்சத்திரங்கள் என கோடிகளை செலவழித்து ஆடல் பாடல் என்று தனது மகனின் திருமண நிகழ்ச்சியை அமர்க்களப்படுத்தி உள்ளார் முகேஷ் அம்பானி.


இந்த நிலையில், இந்த திருமண விழாவிற்கு வருகை தந்திருந்த பிரபல பேஸ்புக் நிறுவனர் மற்றும் அவரது மனைவி ஆனந்த் அம்பானியின் வாட்ச்சை வியந்து பார்த்துள்ளார்கள். தற்போது இது தொடர்பிலான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.


ஆனந்த் அம்பானியின் வாட்சைப் பார்த்த பிரிசில்லா சான், அவரது கையை பிடித்து பார்த்து, 'இந்த வாட்ச் செமயா இருக்கே.. வாவ்' என ஆச்சர்யத்துடன் கூற, மார்க் ஸக்கர்பெர்க, 'எனக்கு பொதுவாக ரிஸ்ட் வாட்ச்சில் விருப்பமில்லை. ஆனால், ஆனந்த் அம்பானி அணிந்துள்ள வாட்ச் வசீகரிக்கிறது. எனக்கு வாட்ச் கட்ட பிடிக்காது. ஆனால், இது ரொம்பவே கூல்' எனத் தெரிவித்துள்ளார்.

Patek Philippe Grand Complication Sky Moon Tourbillion மாடல் வாட்ச்சான இது இந்திய மதிப்பில் ரூபாய் 63 கோடி விலை கொண்டது எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 





Advertisement

Advertisement