• Dec 26 2024

‘டி3’ பட இயக்குநருக்கு ஒரு மாத சிறை தண்டனை? பரபரப்பு தகவல்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் பிரஜன் நடிப்பில் இன்வஸ்டிகேடிவ் த்ரில்லர் பாணியில் உருவான படம் தான் 'டி3' படம்.

இந்த படம் இயக்குனர் பாலாஜி இயக்கத்தில், நடிகர் பிரஜன் மற்றும் நடிகை பிரதீப் வித்யா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதோடு இதில் சார்லி, காயத்ரி யுவராஜ், அபிஷேக் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகியது.

இந்த நிலையில், தற்போது, நீதிமன்ற உத்தரவை மீறி 'டி3'  படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதற்காக இயக்குனருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.

அதாவது, நடிகர் பிரஜன் நடிப்பில் 'டி3' என்ற பெயரில் படம் தயாரிப்பதற்காக சாமுவேல்  காட்சனிடம் தயாரிப்பாளர் மனோஜ் 4 கோடி பெற்றுள்ளார். மேலும், இந்த படத்தில் உரிமையில் 60 சதவீதத்தை சாமுவேலுவிற்கு தருவதாக தயாரிப்பாளர் மனோஜ் ஒப்பந்தம் செய்துள்ளார்.


ஆனால் ஒப்பந்தத்தை மீறி இந்த படத்தை வெளியிட்டதாக வழக்கு தொடர்ந்தார் சாமுவேல். இதனால் டி3' படத்தில் ஒரு ஓடிடி யில் வெளியிட ஐகோர்ட் தடை விதித்தது.

மேலும், படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் உத்தரவை மீறி படத்தை ஓடிடியில் வெளியிட்டதாக இயக்குனர் பாலாஜி தயாரிப்பாளர் மனோஜ்க்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது உள்ளார்.

தற்போது நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை ஓடிடியில் வெளியிட்டதை ஒப்புக்கொண்ட பாலாஜிக்கு ஒரு மாத சிறை  தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement