• Dec 26 2024

தேர்தல் முடிந்தவுடன் சரியான ரிலீஸ் தேதியை பிக்ஸ் செய்த இந்தியன் 2 படக்குழு.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமலின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று 'இந்தியன்'.  இப்படத்தை மாபெரும் இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். அத்தோடு இப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி எனப் பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்தினுடைய மாபெரும் வெற்றிக்கு காரணம் அப்படத்தில் இடம்பெற்ற இசை தான். அதாவது இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் வெற்றிக்கு பின்னர் இதன் இரண்டாம் பாகம் பற்றி 2017ம் ஆண்டு அறிவித்தார் சங்கர். ஆனாலும் அடுத்தடுத்து ஏற்பட்ட சிக்கல்களினால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தின் இரண்டாம் பாகம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகார்வ பூர்வமாக அறிவித்துள்ளனர்.  


இந்தியன் 2 படத்தில் சுதந்திரப் போராட்ட வீரராக மாறிய கமல்ஹசன்,  ஊழல்வாதிகளை வேட்டையாடும் சேனாபதியாக காணப்படுவதோடு, அவர் போராடி வாங்கிய  சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் நம்பப்படுகிறது. 

இந்தியாவின் தேர்தல் ஏப்ரல் 19 தொடக்கம் ஜூன் 1ம் திகதி வரை நடைபெறுகிறது. அதன்பின் ஜூன் 4ம் திகதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில், புதிய ஆட்சி அமைந்ததன் பின்னரே இந்த படம் நிதானமாக ஜூன் 14ம் திகதியளவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் காஜல் அகர்வால், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, விவேக், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


மேலும், இதற்கு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் 2022 ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கமலின் அடுத்த படம் இந்தியன்2 ஜூன் மாதம் வெளியாக உள்ளது.


Advertisement

Advertisement