• Jan 12 2025

படு மோசமாக டீப் பேக் செய்யப்பட்ட ஜோதிகாவின் புகைப்படம்! கிளம்பிய புது சர்ச்சை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் சமீப காலமாகவே  நடிகைகளை  டீப் பேக் தொழில்நுட்பம் பயமுறுத்தி வருகின்றது. இதனால் ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட், கரீனா கபூர் உட்பட பல நடிகைகள் இதில் சிக்கி பல பிரச்சனைகளை சந்தித்து இருந்தார்கள்.

இந்த டீப் பேக் தொழில்நுட்பத்தில் முதல் முதலில் பலியானது ரஷ்மிகா மந்தனா தான். அவர் கறுப்பு உடையில் லிப்டில் இருந்து வெளியே வருவது போன்ற 7 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இவ்வாறு தொழில்நுட்பத்தினால் ஆபாசமாக உருவாக்கப்பட்ட டீப் பேக் வீடியோவை பார்த்த ரஷ்மிகா வருத்தம் தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்களும் கருத்துக்கூறி இருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு இதுபோன்ற அவதூறு செயல்களில் ஈடுபடுபவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை வழங்கியது.


இந்த நிலையில், தற்போது நடிகை ஜோதிகாவின் டீப் பேக் போட்டோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது ஜோதிகாவின் கையில் காமசூத்ரா புத்தகம் உள்ளது போல டீப் பேக் போட்டோ ஒன்று எடிட் செய்யப்பட்டு இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜோதிகா கவர்ச்சி உடையில் இருக்க, அவருக்கு அருகில் இருக்கும் ஆண் மேலாடை இல்லாமல் நிற்பது போல எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் ஜோதிகா Eat your Cake loss your weight என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளரான அஜார் அலி சையத் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் தப்பாக  எடிட் செய்து இணையத்தில் வைரலாக்கி உள்ளார்கள்.


Advertisement

Advertisement