விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரையில் வித்தியாசமான கதைக் களத்துடன் நகர்கின்றது. ஆனாலும் ரோகிணி விஷயத்தில் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல் முத்து, மீனா என்ற கேரக்டர்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகின்றது. இவர்களுக்கு அடுத்ததாக ரோகிணியின் கேரக்டர் முக்கியமானதாக காணப்படுகின்றது. எனினும் க்ரிஷ் விவகாரத்தில் ரோகிணியின் நடவடிக்கை மேலும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது க்ரிஷியை சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றார்கள். இதனால் அவர்களின் காலில் விழுந்து கெஞ்சுகின்றார் முத்து. எனினும் ரோகிணி முத்து, மீனாவுக்கு எதிராகவே இப்போதும் நடந்து கொள்கின்றார்.
இவ்வாறான நிலையில் க்ரிஷ் விவகாரத்தை தொடர்ந்து முத்து சிறுவயதாக இருந்தபோது நடந்தது என்ன? என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே மனோஜால் தான் முத்து ஜெயிலுக்கு போனார் என்றும், இதனால் தான் விஜயாவுக்கும் முத்துவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது என்றும் காட்டப்பட்டது ,
எனவே தற்போது க்ரிஷ் விஷயத்தின் மூலம் முத்து சிறுவயதாக இருந்தபோது நடந்த சம்பவங்கள் வெளிவர உள்ளன. முத்து வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!