தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களுக்கு என்று பிரபலமானவர் நடிகர் விஷால். இவர் ஆக்ஷனில் மட்டுமில்லாமல் காதல், காமெடி என அனைத்து ஜானரிலும் கலக்கக் கூடியவர்.
இந்த நிலையில், நடிகர் விஷால் திரைத்துறைக்குள் நுழைந்து நேற்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதாகவும், இதனால் தனது நன்றியை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில்,
இன்று நான் நடிகராக திரை உலகில் பயணித்து 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் எனது பெற்றோருக்கும், என் குருநாதர் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கும், லோயலா கல்லூரி ஆசிரியர் பாதருக்கும், என்னை உயர்த்தி அழகு பார்த்த அத்தனை பேருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பல கனவுகளுடன் திரையுலகில் அடி எடுத்து வைத்தேன். இன்று உங்களின் அன்பினால் உங்களின் நம்பிக்கையில், உங்கள் கரதோஷத்தில் வாழும் நடிகராக மாறியுள்ளேன். இந்த வெற்றி பயணத்தில் என்னுடைய வெற்றியாக இல்லாமல் எமக்கான வெற்றியாகவே பார்க்கின்றேன்.
எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், என்னை செதுக்கிய இயக்குனர்கள், என்னுடன் உழைத்த இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், துணை நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழிலாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை நண்பர்கள், சமூக ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த 21 ஆண்டுகள் எத்தனை சோதனைகள், எத்தனை சவால்கள் வந்தாலும் எனக்கு துணையாய் நின்று என் அருகில் தோள் கொடுக்கும் தோழனாக இருந்தது நீங்கள் தான். நான் வாழும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்காக தான் இருக்கும்.
நான் நிம்மதியா மூன்று வேலை சாப்பிடுகின்றேன் என்றால் அது உங்களால் மட்டும் தான். இவை எல்லாவற்றுக்கும் நன்றி என்ற ஒற்றை சொல்லால் முடிக்காமல் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை நானும் எனது இயக்கமும் என்றென்றும் செய்வோம். நான் உங்களில் ஒருவன் உங்களுக்காக எப்பொழுதும் குரல் கொடுப்பேன் என உறுதி அளித்துள்ளார் விஷால்.
Listen News!