• Dec 26 2024

90களில் மனங்கவரும் நடிகையாக திகழ்ந்த பிரபலம்! தன் தாயுடன் குழந்தை பருவத்தில்..?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைத்தளங்களில்  பிரபல நட்சத்திரங்களின் புகைப்படங்கள், அதாவது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என புகழ் பெற்றவர்களின் சிறிய வயது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

அந்த வகையில், கடந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.


அதன்படி, தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், பிரபு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடிகை ரோஜா இணைந்து நடித்து பட்டையை கிளப்பியுள்ளார்.


அத்துடன், இவர் தன்னை கதாநாயகியாக அறிமுகம் செய்த, இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆந்திராவில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.


இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட நடிகை ரோஜாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த புகைப்படத்தில் நடிகை ரோஜாவை குழந்தை பருவத்தில் அவரது தாய் தூக்கி வைத்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement