• Oct 05 2025

கரூர் சம்பவத்தால் ஜனநாயகன் படத்திற்கு விழுந்த பேரடி..! என்ன தெரியுமா.?

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழகம் முழுவதும் பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கரூர் விபத்து, தற்போது சினிமா உலகத்தையும் பாதித்துள்ளது.


அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, திரைத்துறையினரும் இந்த நிகழ்வால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு ஓரமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பரிதாபகரமான விபத்தில், 41 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வானது நெரிசல் மற்றும் கட்டுப்பாடின்றி ஏற்பாடு செய்யப்பட்ட விழா காரணமாக நிகழ்ந்தது என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.


இதனை அடுத்து அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், திரைத்துறை பிரபலங்களும் தங்கள் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூர்த்தி கட்டத்தில் உள்ளதால் அதன் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிட்டினை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடுவதாக கூறியிருந்தனர்.

எனினும், கரூரில் நடந்த மக்கள் உயிரிழப்பு சம்பவம் காரணமாக, படக்குழு மிகுந்த அனுதாபமும் மரியாதையும் செலுத்தும் வகையில், பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement