விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9ஆவது சீசன் நாளை மறுதினம் ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இதுவரை இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக எட்டு சீசன்கள் முடிந்துள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 9-வது சீசன் பற்றி மிகப்பெரிய அப்டேட் ஒன்றை கொடுக்க உள்ளார் ரவீந்தர். இதனால் இன்று மதியம் 12 மணிக்கு எல்லாரும் உஷாரா இருங்க என்பது போல போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இவருடைய போஸ்டர் வைரலாகி வருவதோடு ரசிகர்களின் ஆவலையும் தூண்டி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தனது ரிவ்யூவை கொடுக்கும் ரவீந்தர், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வார். கடந்த சீசனில் பங்கு பற்றிய இவர் யாரும் எதிர்பாராத வகையில் ஓரிரு வாரங்களிலேயே வெளியேறினார். இது பெரும் கேலிக் கிண்டலுக்குள்ளானது.
இவ்வாறான நிலையிலையே பிக்பாஸ் நிகழ்ச்சி 9 வது சீசன் பற்றி இன்று மதியம் அப்டேட் கொடுக்க உள்ளார். எனவே இந்த சீசன் எப்படி அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!