தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக நடிகை ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ஜோடி திகழ்ந்து வருகின்றது. இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவை நடிகை ராஷ்மிகா காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் உலாவியது. ஆனாலும் இது தொடர்பில் இருவரும் மௌனம் காத்தனர். ஆனால் அடிக்கடி அவுட்டிங், டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் வெளியாகக் கொண்டிருந்தன.
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக காணப்படுகிறது.
குறித்த நிச்சயதார்த்த விழாவில் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி திருமணம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தகவல் தொடர்பில் ராஷ்மிகா மந்தானா தரப்பிலோ, விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்தோ எந்த ஒரு உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இவர்களுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!