• Oct 05 2025

அடேங்கப்பா..! தம்பி ராமையா எழுத்தில்.. உமாபதி இயக்கும் புதிய படம்.! வைரலான பூஜை கிளிக்ஸ்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் தம்பி ராமையா, இப்போது ஒரு புதிய அவதாரத்தில் திரும்பியுள்ளார். பல வெற்றிப் படங்களில் நகைச்சுவை வேடம் , தந்தை என பன்முக திறமையை வெளிப்படுத்திய இவர், தற்போது ஒரு புதிய படத்திற்காக கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.


அந்தப் படத்தை இயக்கும் இளம் இயக்குநர் வேறு யாரும் இல்லை; தம்பி ராமையாவின் மகனும், அர்ஜுனின் மருமகனாகவும் விளங்கும் உமாபதி ராமையா.

இந்தக் கவனம் ஈர்க்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று, சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பூஜை நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது.


திரைப்படத்துறையின் பிரபலங்கள் சிலரும், ஊடகங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த போட்டோஸ் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement