• Dec 26 2024

சிறகடிக்க ஆசை பிரபலங்களின் திடீர் பேட்டி! விஜயா உண்மையில் இப்படி தானா? உடைந்த உண்மைகள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் காணப்படுகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டராக முத்து, மீனா கதாபாத்திரங்கள் காணப்படுகிறது. இதை அடுத்து கொடுமைக்கார மாமியாராக விஜயா கேரக்டரும் இந்த சீரியலை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல உறுதுணையாக உள்ளது.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி வழங்கியுள்ளார்கள். அதன்படி அவர்கள் கூறிய சுவாரஸ்ய விடயங்களை பார்ப்போம்.


அதாவது, சிறகடிக்க ஆசை சீரியல் நாயகியாக நடித்த வரும் கோமதி பிரியா, தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற சீரியகளிலும் நடித்து வருகிறார்

அதன்படி மீனா கூறுகையில், இந்த ஸ்டேட்ட விட்டு வேற ஸ்டேட் போனா ரெண்டு பர்சனாலிட்டியா வாழ்ற மாதிரி இருக்கு. சிறகடிக்க ஆசை சீரியல எனக்கு அடி விழும், ஆனா அங்க நான் தான் எல்லாருக்கும் பளார் பளார்ன்னு அடிப்பேன். இங்கு அமைதியாக இருப்பன், ஆனா அங்க ஜாலியா fun  பண்ணிட்டு இருப்பேன் என கூறியுள்ளார்.


இதை அடுத்து ரவி கூறுகையில், வெளியில் நாம பார்க்கிற ஃபேன்ஸ் எல்லாரும் நம்ம கூட நல்லா கனெக்ட்டா பேசுறாங்க. டெய்லி நாம அவங்க வீட்டுல பழகின போல, ஒரு பெமிலியா, ஒரு மெம்பரா, நம்ம கிட்ட பேசும் போது ஏதோ ரொம்ப நாள்  பழகி இருக்கிற மாதிரியே இருந்துச்சு. இந்த சீரியல் மக்கள் மத்தியில் அவ்வளவு கனெக்ட் ஆகி இருக்குது.

அத்துடன் மனோஜ் கூறுகையில், ரொம்ப பெருமையா இருக்கு. இந்த சீரியல் ரொம்ப ரீச் ஆகி இருக்கு. நான் அண்மையில் ஒரு இடத்துக்கு காரில் சென்று., அதில் ஒருவரிடம் அட்ரஸ் கேட்க, ஏங்க.. நீங்க முத்து தம்பிட அடி வாங்கினவங்க தானே.. அப்படி என்று கேட்டார். அருகில் உள்ளவரையும் கூப்பிட்டு மனோஜ் தம்பி வந்து இருக்கார் என்று கூப்பிட்டு காட்டுகிறார்கள். அவ்வளவுக்கு இந்த சீரியல் ரீச்சாகி இருக்கு என்றார்.


இவ்வாறு இந்த சீரியலில் நடிக்கும்  முத்து, மனோஜ், ரவி மற்றும் மீனா, ரோகினி, ஸ்ருதி ஆகிய  ஆறு பேரும் கலக்கலாக பேட்டி கொடுத்துள்ளார்கள்.

அத்துடன் விஜயா இந்த சீரியலில் இருப்பது போல இல்லை. எல்லோருடனும் மிகவும் சகஜமாக பழகுவார் என்றும்  கூறியுள்ளார்கள்.

Advertisement

Advertisement