• Dec 25 2024

கட்டியணைத்து சமந்தா கொடுத்த போஸ்! வைரலாகும் வருங்கால கணவர் எடுத்த சூப்பர் கிளிக்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் வெப் தொடர் தான் சிட்டாடல். ஹாலிவுட்டில் உருவான இதன் இந்திய பதிப்பில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த வெப் தொடரின் துவக்க விழா சமீபத்தில் பிரம்மாண்ட முறையில் அமேசான் ப்ரைம் நடத்தியது.


சமந்தாவின் வெப் தொடர் மட்டுமின்றி இந்த ஆண்டு அமேசான் ப்ரைம் வாங்கியுள்ள அனைத்து, திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கும் சேர்த்து இந்த விழாவை நடத்தியது. பிரம்மாண்ட முறையில் நடந்த இந்த விழாவில் இந்திய சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.


நடிகை தமன்னாவும் இந்த விழாவில் பங்கேற்றார். அப்போது தமன்னாவை சந்தித்து அவருடன் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் சமந்தா. அந்த புகைப்படத்தை, தமன்னாவின் வருங்கால கணவரான விஜய் வர்மா தான் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்...



Advertisement

Advertisement