• Dec 26 2024

அப்பா லெஜெண்ட் தான்... நான் மியூசிக் போட்டா ச்சீ -தூனு சொல்லுவாரு... மனசு கஷ்ட்டமா இருக்கு... கார்த்திக் ராஜா ஓப்பன் டாக்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்படுகிறார் இளையாராஜாவின் மகன் கார்த்திக் ராஜா தனது அப்பா இளையராஜா பற்றிய ஷாக்கிங்கான விடையத்தை கூறியுள்ளார்.


இளையராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பல படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றனர். இந்த நிலையில் நேர்காணலில் பங்கேற்ற கார்த்திக் ராஜாவிடம், நீங்க அப்பா பிள்ளையா? அம்மா பிள்ளையா? என கேள்வி கேட்கப்பட்டது.


இதற்கு அவர், ”நான் அம்மா பிள்ளை தான். எப்போதும் அப்பா மீது மரியாதை தான் இருக்கிறது. வீட்டுலையும் அப்பா தான் லெஜெண்ட். மற்ற குடும்பம் மாதிரி வா பா அங்க போலாம் அப்படி எல்லாம் கூப்பிட முடியாது. ரொம்ப கண்டிப்பா இருப்பார். இப்போ கூட வீட்டுல சண்டை போயிட்டு இருக்கு".


"அப்பா கிட்ட ஏதாவது பாட்டு போட்டு காட்டினாள் ச்சீ.. த்தூ.. சொல்லுவாரு. அதனால் இசை பற்றி அப்பாவிடம் பேசுவதில்லை. அந்த சமயத்தில் என் மனசு கஷ்டமா இருக்கும்" என்று கார்த்திக் ராஜா வெளிப்படையாக கூறியுள்ளார். 

Advertisement

Advertisement