• Dec 26 2024

’திருமகள்’ சீரியல் நடிகைக்கு கல்யாணம்.. மாப்பிள்ளை ‘சுந்தரி’ சீரியல் நடிகர் தான்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

’திருமகள்’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைக்கு இன்று திருமணம் ஆகி உள்ள நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டவர் சுந்தரி சீரியலில் நடித்தவர் என்பது தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

’திருமகள்’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஹரிதா என்பவர் கடந்த சில ஆண்டுகளாக அரவிஷ் என்பவரை காதலித்து வந்தார் என்பதும் அரவிஷ் ‘சுந்தரி’ சீரியலில் நடித்துக் கொண்டிருப்பவர் என்பதை குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த நிலையில் தங்களது காதலுக்கு இரு தரப்பின் பெற்றோர்களிடம் சம்மதம் கிடைத்து விட்டதை அடுத்து இன்று கோவையில் திருமணம் செய்து கொண்டனர்.

அரவிஷ்- ஹரிதா திருமணத்திற்கு பல சின்னத்திரை உலக பிரபலங்கள் வருகை தந்து புதுமண தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஏற்கனவே இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில் இவர்களது திருமணமும் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் யூடிபில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

சுந்தரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் அரவிஷ் கோவையை சேர்ந்தவர் என்பதும் திருமகள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஹரிதா ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல சின்னத்திரை உலக நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த பட்டியலில் தற்போது அரவிஷ் - ஹரிதா ஜோடியும்  இணைந்துள்ளனர்.

Advertisement

Advertisement