• Dec 26 2024

நிவாரணம் வழங்கும் போது திடீரென மயங்கி விழுந்த நடிகர் டி. ராஜேந்தர்- பதறிப் போன ரசிகர்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தமிழகம் முழுவதும் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது.

திரையுலகப் பிரபலங்கள் பலரும் கூட நிவாரண உதவியை வழஙகி வருகின்றனர்.இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பத்திற்கு நடிகர் விஜய்  இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


அதே நேரத்தில் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு டி. ராஜேந்தர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.மக்களுக்கு சிரித்த முகத்துடன் நிவாரண பொருட்களை வழங்கி வந்த டி. ராஜேந்தர் திடீரென மயக்கம் போட்டு விழப் பார்த்தார். அவரை நாற்காலியில் அமர வைத்த சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனடியாக தண்ணீர் தெளித்து காற்று வர வைத்து அவரை ஆசுவாசப்படுத்தினர். 

சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்தார். டி. ராஜேந்தர். அவரது வயதை கருத்திக் கொண்டு வீட்டில் ஒய்வெடுக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement