• Dec 26 2024

பயில்வானை பார்த்து பயந்த சூரி.. ஒரு வார்த்தையில் அப்படியே அடங்கி போயிட்டாரா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தற்போது பிரபல நடிகர்கள் தாங்கள் நடித்த படம் ரசிகர்களுக்கு பிடிக்குமா? பொதுமக்களுக்கு பிடிக்குமா? என்பதை விட யூடியூப்பில் விமர்சனம் செய்பவர்களுக்கு பிடிக்குமா? என்பதில் தான் அதிக கவலை கொண்டு வருகின்றனர்.

 யூடிபர்கள் சர்வ சாதாரணமாக ஒரு திரைப்படத்தை போகிற போக்கில் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து விடுவதால் படத்தின் வசூல் பெருமளவில் பாதிக்கும் என்றும் குறிப்பாக முதல் நாளே கிட்டத்தட்ட அனைத்து யூடியூப் விமர்சகர்களும் படத்தை விமர்சனம் செய்துவிடும் நிலையில் அவர்களது விமர்சனம் வசூலில் பெரும் தாக்கத்தை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சூரியின் ‘கருடன்’ திரைப்படத்தின் முதல் நாளில் பயில்வான் ரங்கநாதன் படம் பார்க்க வந்த போது அவரை பார்த்து முதலில் சூரி அச்சப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் படம் பார்த்து நெகட்டிவ் விமர்சனம் சொன்னால் பிரச்சனையாகி விடுமே என்ற கவலையுடன் சூரி இருந்த நிலையில் படம் முடிந்தவுடன் வெளியே வந்த பயில்வான் ரங்கநாதன் சூரியை பார்த்து ’படம் சூப்பராக இருக்கிறது, நிச்சயம் இந்த படம் ஹிட் ஆகும்’ என்று கூறியது சூரிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

மேலும் ’ஜெயிச்சிட்டிங்க’ என்று பயில்வான் ரங்கநாதன் சொன்ன அந்த ஒரு வார்த்தை சூரிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், பயில்வான் ரங்கநாதன் போன்ற யூடியூப் விமர்சகர்களுக்கே இந்த படம் பிடித்து விட்டது என்றால் கண்டிப்பாக பொதுமக்களுக்கும் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்ததாகவும் அவரது நம்பிக்கை வீண் போகாமல் தற்போது இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement