• Dec 26 2024

புதிய காட்சியில் நடிக்க பழைய படங்களில் ரெஃபரன்ஸ் தேடும் நடிகர்கள்? சினிமாவில் இப்படியுமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டார் ஆகவும் திகழ்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

இந்த நிலையில், அண்ணாமலை படத்தில் வரும் பாம்பு சீன்க்கு அவர் எப்படி நடித்தார் என்ற சுவராஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது, சில காட்சிகளுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்பதற்கு சிவாஜி படங்களை எடுத்து ரெஃபரன்ஸ் பார்த்தாலே போதும். அத்தனை நவரசங்களையும் அவர் நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார். 

ரஜினி படத்தில், குறிப்பாக அண்ணாமலை படத்தில் வரும் பாம்பு சீனுக்கு மிகவும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ரஜினிகாந்த். இன்றளவில் மட்டும் அந்த சீனுக்கு அவரைப் போல யாரும் நடிக்கவில்லை. அவரை பார்த்துதான்  நடிப்பதும் இயலாததொன்று.


அதாவது, ஒருவருக்கு  பாம்பு மேலே ஊர்ந்து போகும்போது ஒரு வித உணர்வு வரும், பயம் வரும், கூச்சம் வரும், அருவருப்பு வரும் ஆனால் இவை ஒன்றையும்வெளிப்படுத்தாமல் மக்களுக்கு பயத்தையும் காட்டாமல் அந்த காட்சியில் அற்புதமாக நடித்திருப்பார் ரஜினி.


இந்த பாம்பு சீனுக்கு ரெஃபரன்ஸ் தேடினால் நிறைய படங்களில் மலைப்பாம்பு உருவதாக தான் நடித்து இருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு பாம்பு சீனுக்கு நடிப்பது மட்டுமே ரஜினிக்கு சவாலாக இருந்தது. அத்துடன் அதில் எப்படி எக்ஸ்பிரஷன் செய்வது என்பதும் சவாலாக இருந்தது.

ஆனால் அந்த காட்சியை தியேட்டரில் பார்க்கும்போது ஒரு புதுவிதமான நடிப்பையும் காமெடியையும் பார்த்து கைதட்டல்கள்  குவிந்தது.

அந்த காட்சியை இயக்குனர் கூட நடித்துக் காட்ட முடியாத காட்சி. ஆனாலும் அந்த சீனில் அவர் குரலில் கூட பயத்தை காட்ட முடியாமல், கம்மி போய் வார்த்தைகள் வராமல் தடுமாறி உளறுவது போல இருந்தாலும் அந்த ரியாக்ஷன் மக்களை மிகவும் ரசிக்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement