• Dec 26 2024

விஜயாவை ஜெயிலுக்கு போக சொன்ன மீனா! உண்மையை கிளறும் ரோகிணி? சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், முத்துவிடம் தான் திருடிய பணத்தைக் கொடுத்த சத்யா, இனி என் விசயத்துல தலையிட வேண்டாம் என சொல்கிறார். மேலும் அக்காவ அனுப்பி அட்வைஸ் பண்ண வேண்டாம் எனவும் சொல்கிறார்.

மறுபக்கம், இன்னும் சமையல் முடியலையா என மீனாவிடம் விஜயா கேட்க, டைம்க்கு சாப்பாடு வேணும் என்றா நீங்க ஜெயிலுக்கு தான் போகணும் என்று மீனா சொல்கிறார்.


இதையடுத்து வீட்டுக்கு வந்த முத்து, திருடன் கிட்ட இருந்து பணம் கிடைச்சிடுச்சு, போலீஸ் வாங்கி கொடுத்தாங்க என அண்ணாமலையிடம் பணத்தைக் கொடுக்கிறார். அதற்கு விஜயா யார் அந்த திருடன், அவனை நேர்ல கூட்டி வா செருப்பால அடிக்கணும் என சொல்கிறார்.

ரோகிணியும், அது எப்படி மொத்த காசும் திருடன் கொடுப்பான்? இத நம்ப முடியல என்று கேள்வி மேல கேள்வி கேக்கிறார். ஆனாலும் அவருக்கு பதிலடி கொடுத்து ஆப் பண்ணுகிறார் முத்து.

ஆனாலும், ரூம்க்கு போன ரோகிணி மனோஜிடம், முத்து சொல்லுற ஒன்றும் நம்புற மாதிரி இல்ல, யார் திருடன் என்று முத்துவுக்கு தெரிஞ்சி இருக்கனும் இல்ல முத்து தான் ஆள் வச்சு பணத்தை திருடி இருக்கனும் என்று சொல்ல, முத்து அப்படி எல்லாம் செய்ய மாட்டான் என மனோஜ் சொல்கிறார்.

இதை எல்லாம் மீனா வெளியில் இருந்து கேட்டுக் கொண்டு விட்டு செல்கிறார். இது தான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement