• Dec 27 2024

தயாரிப்பாளர் முன் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி போல்டாக பேசிய நடிகை: பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


பிரபல நடிகை ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது தயாரிப்பாளர் முன்னிலையில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து போல்டாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

திரையுலகை பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருவதாகவும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாதவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நடிகைகள் மட்டுமே பல வாய்ப்புகளை பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ‘ஆங்காரம்’ என்ற திரைப்படத்தை முஹவை ஜமீன் என்பவர் தயாரித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை டீனா தயாரிப்பாளர் முன்னிலையில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’இந்த படத்தில் நடிக்கும்போது எனக்கு அனைவரும் நல்ல மரியாதை கொடுத்தார்கள், தவறாக ஒரு சிறு சம்பவம் கூட நடக்கவில்லை, குறிப்பாக யாரும் எனக்கு பாலியல் தொல்லை தரவில்லை. அட்ஜஸ்ட்மென்ட் என்ற பேச்சுக்கு இடமில்லாமல் இருந்தது. ஒருவேளை அப்படி இருந்திருந்தால் நான் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டேன்’ என்று தயாரிப்பாளரை முன் வைத்துக் கொண்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement