• Dec 27 2024

நள்ளிரவில் தூக்கத்தில் எழுப்பி தொந்தரவு செய்வாரு: கணவர் குறித்து வெளிப்படையான சொன்ன மகாலட்சுமி

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது கணவர் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ’நள்ளிரவில் எழுப்பி தொந்தரவு செய்வார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். 

தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவரை சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருப்பதியில் இவர்கள் திருமணம் நடந்த நிலையில் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது என்பதும் அதன் பின்னர் இருவரும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு வந்தனர் என்பதும் குறிப்பாக திருமணம் நடந்த 100 நாள் கொண்டாட்டத்தை இருவரும் சந்தோஷத்தோடு கொண்டாடிய புகைப்படங்கள் வைரல் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வழக்கில் ரவீந்தர் கைது செய்யப்பட்டபோது மகாலட்சுமி மிகவும் வருத்தமாக இருந்தார் என்பதும் தற்போது ரவீந்தர் ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகாலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய கணவர் தான் திருமணத்திற்கு முன்பே ’என்னால் உடம்பை குறைக்க முடியாது, ஆனால் அதே நேரத்தில் நீ உன்னுடைய உடல் எடையை அதிகரித்து என்னை போல் மாறிவிடு’ என்று காமெடியாக கூறியதாகவும் தெரிவித்தார். 

இதை நான் முதலில் காமெடியாக தான் நினைத்தேன், ஆனால் அவர் வேண்டுமென்று என்னை அதிகமாக சாப்பிட வலியுறுத்துவார் என்றும், குறிப்பாக நள்ளிரவில் எழுப்பி சாப்பிட சொல்வார் என்றும் அது எனக்கு பெரிய அன்பு தொல்லையாக இருந்தது என்றும் அந்த பேட்டியில் அவர் காமெடி உடன் கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement